அரசு பஸ் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் போக்குவரத்து துறைக்கு ரூ.59.15 நஷ்டம் - பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பஸ்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.59.15 நஷ்டம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அரசு பஸ் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் போக்குவரத்து துறைக்கு ரூ.59.15 நஷ்டம் - பழனிவேல் தியாகராஜன்
Published on

சென்னை

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.

மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* ஒரு கிலோ மீட்டர் பஸ் ஓடினால் ரூ.59.15 போக்குவரத்து துறைக்கு இழப்பு

* டீசல் விலைக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்து துறையின் நஷ்டத்துக்கு காரணம்

* மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நெருக்கடியில் போக்குவரத்துத் துறை உள்ளது.

* மகளிருக்கு இலவச பஸ் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே போக்குவரத்து துறையில் நஷ்டம் உள்ளது.

* கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் வாகன வரி குறைவு

* தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றி அமைக்கப்படவில்லை

என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com