“தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க ஒரு இயக்கம் உண்டென்றால், அது..” - எம்.பி. இன்பதுரை பதிவு

மேகதாது அணை விவகாரத்தில், தி.மு.க.வின் திடீர் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் அவசரகதியில் ஏற்றதாக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க ஒரு இயக்கம் உண்டென்றால், அது..” - எம்.பி. இன்பதுரை பதிவு
Published on: 

சென்னை,

காவிரி உரிமையை, தி.மு.க.வும், த.வெ.க. அரசும் கூட்டு சேர்ந்து, தவறான அணுகுமுறை மூலம் நீர்த்துப்போக செய்துள்ளதாக அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.

சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 20.11.2026 அன்று சுப்ரீம்கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் தி.மு.க. தாக்கல் செய்த தனி மனுவும் அடக்கம்!

காவிரி இறுதித் தீர்ப்பின்படி செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அதிகார வரம்பிற்குள் வரும் விவகாரங்களில், அவற்றின் பணிகளை சுப்ரீம்கோர்ட்டு ஏற்க முடியாது என தெளிவுபடுத்தி, த.வெ.க. அரசின் மனுக்களையும் - தி.மு.க.வின் தனி மனுவை தேவையற்றது எனவும் குறிப்பிட்டு தள்ளுபடி செய்துள்ளது.

தவறான அணுகுமுறை

அ.தி.மு.க. போராடி பெற்ற காவிரி உரிமையை, தி.மு.க.வும், த.வெ.க. அரசும் கூட்டு சேர்ந்து, தவறான அணுகுமுறை மூலம் நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பது தெளிவாகிறது.

அ.தி.மு.க. மட்டுமே

ஏற்கனவே, மேகதாது அணை விவகாரத்தில், தி.மு.க.வின் திடீர் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் அவசரகதியில் ஏற்று, சட்டமன்ற தீர்மானத்தில் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இடைச்செருகலாக இணைத்தபோதே, இது காவிரி உரிமைக்கு எதிரான சட்டமன்ற நடைமுறை மீறல் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்தார்.

மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்கிறோம்.. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க ஒரு இயக்கம் உண்டென்றால், அது அ.தி.மு.க. மட்டுமே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X