ரபேல் விவகாரத்தில் மர்மம் இல்லை என்றால் வெளிப்படையாக ஏன் கூறக்கூடாது? ப.சிதம்பரம் கேள்வி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரபேல் விவகாரத்தில் மர்மம் இல்லை என்றால் வெளிப்படையாக ஏன் கூறக்கூடாது? ப.சிதம்பரம் கேள்வி
Published on

ரபேல் விவகாரத்தில் 25-3-2015, 26-3-2015, 8-4-2015, 10-4-2015, 9-11-2015, ஜனவரி 2016, செப்டம்பர் 2016, 28-11-2016 ஆகிய புதிய தேதிகள் வெளிவந்துள்ளன. கண்டிப்பாக பிரதமர், பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை மந்திரி இந்த தேதிகளில் என்ன நிகழ்வுகள் நடந்தது என்பதை கூறவேண்டும். எந்த மர்மமும் இல்லை என்றால், முழு விவகாரத்தையும் ஒரே அமர்வில் வெளிப்படையாக ஏன் சொல்லக்கூடாது? அலமாரியில் இருந்து நிகழ்வுகள் மற்றும் உண்மைகள் ஒவ்வொன்றாக ஏன் வெளியேறவேண்டும்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com