

சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், ஒரே நாடு பத்திரிகையின், சுதந்திரம் 75 ஆரம்ப விழா' என்ற சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மலரை சுதந்திரப் போராட்ட வீரரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான டாக்டர் ஹண்டே வெளியிட, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பெற்றுக்கொண்டார். விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-
போஸ்டர் கலாசாரத்தை தமிழக பா.ஜ.க.வில் தடை செய்ய வேண்டும். அதற்கு முன்னோடியாக எனது போட்டோவையும் போட வேண்டாம் என்று கூறப்போகிறேன். நமது வேலை, எழுத்து, பேச்சின் மூலமாக தெரிய வேண்டுமே தவிர ஆளுயர கட்-அவுட்டுகள் மூலம் அல்ல. நாம் அரசியலை தூய்மைப்படுத்த வந்துள்ளோம். அரசியல் தூய்மை அடைந்தால் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.