"இதை தடுக்காவிட்டால் பட்டினிப் போராட்டம் நடக்கும்" - முதல்-அமைச்சருக்கு பள்ளிக்குழந்தைகள் கடிதம்

கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக, முதல்-அமைச்சருக்கு பள்ளி குழந்தைகள் கடிதம் எழுதியுள்ளனர்.
"இதை தடுக்காவிட்டால் பட்டினிப் போராட்டம் நடக்கும்" - முதல்-அமைச்சருக்கு பள்ளிக்குழந்தைகள் கடிதம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கனிமவளங்கள் தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கீழகடையம் ஊராட்சித் தலைவர் பூமிநாத் மகன் அஸ்வின் சுபநாத், பூமிநாத்தின் சகேதரர் சந்திரசேகரின் மகள்களான சுப பிரியங்கா, சபிதா ஆகிய மூவரும், பேராட்டங்கள் குறித்து பெற்றேரிடம் விவரம் கேட்டுள்ளனர்.

இதைத்தெடர்ந்து, குழந்தைகள் மூவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் 14-ம் தேதி, கடையம் சின்னத்தேர் திடலில், பட்டினிப் போராட்டம் நடத்தப்பேவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com