

சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மகளிர் தின விழா இன்று மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறர். விஜய் கூறியதாவது
தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மட்டும் இதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும். அன்னபூரணி திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணம் இன்றி வழங்கப்படும் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணம் ஆகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், தரமான பட்டுப்புடவை வழங்கப்படும்.
கல்வி இடைநிற்றலை தடுக்க ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் பொருளாதர நிதி வழங்கப்படும். அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க 'அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்' அமைக்கப்படும். இந்த 'பாஸ்ட் ட்ராக்' (Fast Track) நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் இனி நிலுவையில் இல்லாத நிலை ஏற்படும். விசாரணை முறையாக நடத்தப்பட்டுத் தீர்ப்பும் விரைவாக வழங்கப்படும்.
பெண்களுக்கு மிகவும் தேவையான நாட்களில், பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் (Sanitary Pads) வழங்குவது உறுதி செய்யப்படும்.
நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும், பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு ஐந்து லட்சம் வரை வட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படும். சுய உதவிக்குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSMEs) மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும்; அதாவது 100% மானியமாகவே வழங்கப்படும்” என மொத்தம் 12 வாக்குறுதிகளை விஜய் இன்று அறிவித்தார்.