கட்டுப்பாட்டுடன் என்னை வளர்த்து இருந்தால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது - மிஸ் இந்தியா அனுகீர்த்தி

கட்டுப்பாட்டுடன் என்னை வளர்த்து இருந்தால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ் நாட்டு பொண்ணு அனுகீர்த்தி கூறி உள்ளார். #AnukreethyVas #Missindia
கட்டுப்பாட்டுடன் என்னை வளர்த்து இருந்தால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது - மிஸ் இந்தியா அனுகீர்த்தி
Published on

சென்னை

மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை சேர்ந்தவர் இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சி. தற்போது உலக அழகிப் போட்டிக்கு தயாராகி வருகிறேன், அதற்காக கவனம் செலுத்தி வருகிறேன். என்னால் முடிந்தவறை அனைத்து துறையிலும் சிறந்தவராக மாற்றி வருகிறேன்.

6 மணிக்கு வீட்டுக்கு வா, இந்த உடைதான் அணிய வேண்டும் என கட்டுப்பாட்டுடன் என்னை வளர்த்து இருந்தால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. எனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்த எனது தாயாருக்கு நன்றி. அம்மா என்னை தைரியமான பெண்ணாக வளர்த்தார். வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதி நிதியாக பங்கேற்பதில் பெருமை தருகிறது.

உலக அழகிப் போட்டியில் வெல்வோர் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். தமிழ் மொழியை கற்பது கடினம், பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். தமிழ் கலாசாரம், அருமை தெரிந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும்.

டிசம்பரில் சீனாவில் நடக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்க கவனம் செலுத்தி வருகிறேன்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com