

சென்னை,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தசூழலில் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதிப் பருவத் தேர்வுகளை சென்னை ஐஐடி ஒத்திவைத்துள்ளது. இதேபோல் மே 3ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற வேண்டிய பருவத்தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகமும் ஒத்திவைத்துள்ளது.
மே 17ஆம் தேதி முதல் பருவத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்த சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்ததாக தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும் தேர்வுகளின் மறுத்தேர்வுகளுக்கான தேதி கொரோனா பாதிப்பு குறைந்த பின் அறிவிக்கப்படும் என சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.