இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடி பேரூராட்சி கூட்டம்
Published on

இளையான்குடி

இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் செயல்படுத்துவது, பள்ளி அளவிலான குழுக்கள் அமைப்பது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது, சாலையோர வியாபாரிகள் நலன், வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், அடையாள அட்டை வழங்குதல், விற்பனைக்குழு அமைத்தல், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 2 செட் சீருடை வழங்குதல், தீபாவளி பண்டிகைக்காக முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்குதல், நலத்திட்ட பணிகளின் முன்னேற்றம், புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com