

கன்னியாகுமரி,
சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட வழக்கில் மருத்துவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது நர்சிங் கல்லூரி மாணவி. இவர் வீட்டிற்கு அருகில் தினேஷ் என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். தினேஷ் 17 வயது நர்சிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததால் மாணவி கர்ப்பமடைந்தார். இதனை அறிந்த பெற்றோர் தினேஷ் மற்றும் அவரது மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு எடுத்தனர். பின்னர், மாணவிக்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது.
இது குறித்து மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவர் கிஷோர் ( வயது 61), அவரது மகள் சரண்யா ( வயது 32) மற்றும் நர்ஸ் ரேணுகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் அவருக்கு உடைந்தயாக இருந்த அவரது மனைவி மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.