சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது: 562 பாட்டில்கள், பைக் பறிமுதல்

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீகா மற்றும் போலீசார் கயத்தாறு, அய்யனார் ஊத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது: 562 பாட்டில்கள், பைக் பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீகா மற்றும் போலீசார் நேற்று, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு, அய்யனார் ஊத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 35) என்பதும், அவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் ராஜாவை கைது செய்து, அவரிடமிருந்த 562 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.1,600 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com