சட்டவிரோதமாக ரெயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை: 5 ஆண்டுகளில் 26 பேர் கைது

கன்னியாகுமரியில் ரெயில்வே இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை எடுத்து டிராவல் ஏஜென்சிகள், கணிணி மையங்கள் வாயிலாக முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
சட்டவிரோதமாக ரெயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை: 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
Published on

ஐ.ஆர்.சி.டி.சி. என்ற ரெயில்வே இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை எடுத்து டிராவல் ஏஜென்சிகள் மற்றும் கணிணி மையங்கள் வாயிலாக முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சமீபத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சியில் சோதனை நடத்திய அதிகாரிகள், போலி கணக்குகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர் ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.

கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 26 பேர் இத்தகைய செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 லட்சத்து 12 ஆயிரத்து 217 ரூபாய் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் 22 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com