உடல் நலக்குறைவு: தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி

தயாளு அம்மாள் நேற்றிரவு 7 மணியளவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (93) வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

உடல்நலக்குறைவு

அவர் அவ்வப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார். இதற்காக அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை எடுப்பது வழக்கம். இந்த நிலையில் தயாளு அம்மாள் நேற்றிரவு 7 மணியளவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர், வழக்கமாக சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாயாரின் உடல்நிலை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com