200 கிலோ நெல்மணிகளால் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவம்

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்-காஞ்சனா தம்பதி. இவர்களுடைய மகன் சுசில் சென்ஹா (வயது 9). இவர், அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
200 கிலோ நெல்மணிகளால் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவம்
Published on

மாணவர் சுசில் சென்ஹா, ஆசிரியர் தினத்தை முன்னிட்டும், சிறுவர்களுக்கு விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நேற்று முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை நெல் மணியால் உருவாக்கி சாதனை படைத்தார். 360 சதுர அடி பரப்பளவில் 200 கிலோ பொன்னி நெல்மணிகளை கொண்டு தொடர்ந்து 4 மணிநேரத்தில் வரைந்து அவர் இந்த சாதனையை படைத்தார். அவருடைய இந்த சாதனையை யுனிகோ நிறுவனம் அங்கீகரித்தது. மேலும் இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சாதனை படைத்த பள்ளி மாணவர் சுசில் சென்ஹாவுக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கேடயம் வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com