

சென்னை,
தாராபுரத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த தி.மு.க. பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை விமர் சித்து பேசினார். அதில், 'சத்தியத்துக்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்களான நீங்களே இப்போது என்ன சொல்லி கூப் பிடுறீங்க?. பெட்டி பாமா. இன்னொன்னு இருக்கு, 'பல்டி' பாமா. எப்படி தான் அந்த உருவத்தை வெச்சுக்கிட்டு பல்டி அடிச்சாங்கன்னு தெரியல' என்று பேசினார்.
இந்த பேச்சு சமூகவலைத் தளங்களில் வெளியான நிலையில் ஆளும் த.வெ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சத்தியபாமாவை உருவக்கேலி செய்ததாக மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதியக்கோரி போலீஸ் டி.ஜி.பி.யிடமும் த.வெ.க.வினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திருச்சியின் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி தவெக மகளிர் அணியினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.