இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை - தவெக தலைவர் விஜய்

இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனார். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை. தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






