திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை

திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு, விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை
Published on

பொறையாறு:

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, கலெக்டர் மகாபாரதியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்ய வந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை மனு அளித்தேன். அவர் உடனடியாக தீர்வு காணும் வகையில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரியும் திருக்கடையூர் ஆனைகுளம் பகுதிக்கு விரைந்து சென்று, பன்றி வளர்போரை அழைத்து பட்டி அமைத்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மனு கொடுத்ததும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் மகாபாரதிக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com