போலீசாரின் சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு

போலீசாரின் சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
போலீசாரின் சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு
Published on

மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 47 மனுக்களில், 29 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com