சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு

சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு
Published on

பெரம்பலூர் மாவட்ட போலீசாரும், பெரம்பலூர் வட்டார வருவாய்த்துறையினரும் இணைந்து பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாமினை, பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடத்தினர். இதில் பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா, துணை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர், ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பாக பெற்ற மொத்தம் 18 மனுக்களுக்கு, உடனடியாக தீர்வு கண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com