தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் - மாணிக்கம் தாகூர்

மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.
தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் - மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன? 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

மிகப்பெரிய கல்வி ஊழல்

மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com