

சென்னை:
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து.
அதன் படி குழு அமைக்கபட்டு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் முதல் கட்ட ஆலோசனை நடந்தது. இன்று 2-ம் கட்டமாக ஆலோசனை நடத்தபட்டது.
அதன் பிறகு குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
சேகரிக்கபட்ட தகவல்களின் அடிப்படியில் ஆசோசனை நடைபெற்றது. நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து திரட்டி வருகிறோம். நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது என கூறினார்.
நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.