முழு ஊரடங்கு அச்சத்தால் உப்பு ஏற்றுமதி பாதிப்பு - மரக்காணம் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்காணம் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கு அச்சத்தால் உப்பு ஏற்றுமதி பாதிப்பு - மரக்காணம் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை
Published on

விழுப்புரம்,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விழப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உப்பு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உப்பு உற்பத்தியில் தமிழகத்திலேயே இரண்டாவது இடத்தில் மரக்காணம் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 வார ஊரடங்கு காரணமாக, சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வந்த உப்பை ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ள நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மரக்காணம் பகுதி உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com