கோடை வெயிலின் தாக்கம்: காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தைவிட கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்து உள்ளது.
கோடை வெயிலின் தாக்கம்: காய்கறிகள் விலை கடும் உயர்வு
Published on

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மழை பொழிவும் கடந்த ஆண்டை விட மூன்று சதவீதம் குறைவாக இருக்கும் என்பதால் கடுமையான வெயில் தாக்கத்திற்கு மக்கள் ஆளாவார்கள் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

வெப்ப அலையின் காரணமாக, காய்கறிகளின் உற்பத்தி பாதித்து உள்ளதோடு, வரத்தும் கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தைவிட கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்து உள்ளது. நெல்லையில் இன்று ஒரு கிலோ தக்காளி - ரூ.75, சின்ன வெங்காயம் - ரூ.75, புடலங்காய் - ரூ.45, ஒரு கிலோ கேரட்- ரூ.50, பீன்ஸ்- ரூ.120, பாகற்காய் - ரூ.100க்கு விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com