

சென்னை,
இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். உதித் சூர்யாவுக்கு ஆள்மாறாட்டம் செய்வதில் உடந்தையாக இருந்ததற்காக போலீசார் அவரையும் கைது செய்தனர். இதையடுத்து கைது நடவடிக்கை குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபுவுக்கு போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆள்மாறாட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு நேற்று உத்தரவிட்டார்.