மாதவிடாய் சுகாதார மேலாண்மையை நடைமுறைப்படுத்துங்கள் - பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தல்

அதிகாரம் பெற்ற நபர் மூலம் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் சுகாதார மேலாண்மையை நடைமுறைப்படுத்துங்கள் - பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தல்
Published on: 

சென்னை,

அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான உத்தரவுகளை சுப்ரீம்கோர்ட்டு வழங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி நாளிட்ட தீர்ப்பின் மூலம், அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான உத்தரவுகளை வழங்கியுள்ளது.

சானிட்டரி நாப்கின்

அதன்படி மாணவிகளுக்கு மக்கும் தன்மையுள்ள, உடலுக்கு உகந்த மற்றும் உரமாக்கக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். கழிப்பறைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் மூலம் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்க செய்ய வேண்டும்.

சுகாதார மேலாண்மை

எந்திரங்கள் சாத்தியமில்லாத இடங்களில், பள்ளியில் நியமிக்கப்பட்ட இடம். அதிகாரம் பெற்ற நபர் மூலம் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவேண்டும். ஒவ்வொரு பள்ளியும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை மூலையை அமைத்து பராமரிக்க வேண்டும். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com