பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்

புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்
Published on

சென்னை,

வேலை வாய்ப்புக்கு ஏற்ப பெறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டது. அதன்படி, பெறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, "காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள பெறியியல் பாடத்திட்டங்கள் விரைவில்வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது. முதல் 3 செமஸ்டர்களுக்கு 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 2ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளிடப்பட்டு உள்ளது.

மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.   

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com