ஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு

ஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

சேலம்

ஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கடத்தி சென்று திருமணம்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 29). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி தண்ணீர் பிடிக்க வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்தார். பின்னர் ராஜா அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com