தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

ஓசூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Published on

ஓசூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24.11.2019 அன்று அந்த சிறுமிக்கு தமிழ் எழுத்து பயிற்சி சொல்லி கொடுப்பதாக பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறைக்கு, அப்பள்ளியின் தாளாளரான குருதத் (வயது 61) என்பவர் அழைத்து சென்று உள்ளார். அங்கு அறையில் அடைத்து வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில், குருதத்தை கைது செய்தார்.

7 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சிறுமியை அறையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக தாளாளர் குருதத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜர் ஆகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com