மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு... மனைவியை குத்திக்கொன்ற கணவன்

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு... மனைவியை குத்திக்கொன்ற கணவன்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரின் மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், மாந்தோப்பு உரிமையாளரான பிரகாஷ் என்பவருடன், சீதா தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சீதாவின் கணவர் சின்னமுத்து, பிரகாஷின் மாந்தோப்புக்கு தன் உறவினர்களுடன் சென்று மனைவியை தன்னுடன் வாழ வருமாறு கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில், கடைசிவரை கணவருடன் செல்ல மறுத்து சீதா வாக்குவாதம் செய்த நிலையில், இதையறிந்து அங்கு வந்த பிரகாஷ், தன் காதலியின் கணவர் சின்னமுத்து மற்றும் அவரின் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு சின்னமுத்துவின் உறவினர்கள் சிதறி ஓடிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சின்னமுத்து, தன்னுடன் வர மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாந்தோப்பு உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சின்னமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com