சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். கால்வாயில் மேம்பாட்டுப் பணிகள் - விரைந்து முடிக்க துணை ஆணையாளர் கவுஷிக் உத்தரவு

கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். கால்வாயில் மேம்பாட்டுப் பணிகள் - விரைந்து முடிக்க துணை ஆணையாளர் கவுஷிக் உத்தரவு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அண்ணாநகர் மண்டலத்திற்குப்பட்ட, இயந்திர வாகனங்கள் பனிமனை, டி.வி.எஸ். கால்வாய், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றினை மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்று (17.07.2026) மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட டி.வி.எஸ். கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ராஜமங்கலம், 1-வது தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 2-வது தெருவில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி, இயந்திர வாகனங்கள் பனிமனை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வட்டார துணை ஆணையாளர் அலுவகலத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அலுவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com