

சென்னை,
2026 சட்டசபை தேர்தல் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைபேட்டி நிலவுகிறது.விஜய்யின் வருகை தான் இதில் திமுக, அதிமுகவிற்கு உள்ள பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதன் கூட்டணி அமைத்து வலுவாக போட்டியிடுகின்றன அதிமுக, திமுக.. எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
ஆனால் ஆளுங்கட்சியான திமுக வெளியிட்டுள்ள 164 வேட்பாளர்கள் பட்டியலில், பல பிரபலங்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தூத்துக்குடி எம்பி கனிமொழி, சென்னை மேயர் பிரியா, கோவை சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு சீட் கிடைக்கவில்லை.
கோவை தெற்கு அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் திவ்யா சத்யராஜ் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "வாரிசு அரசியல்" என்ற விமர்சனத்தைத் தவிர்க்கவும், ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து பகிர்வதற்கு நல்ல செய்தி ஒன்று உள்ளது. திமுக சார்பில் போட்டியிட திவ்யா சத்யராஜ் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு எந்தத் தொகுதியும் வழங்கப்படாத நிலையில், திவ்யா சத்யராஜ் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.