

கோவை,
கோவையில் அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வுமான சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெறுவதாகவும், முதல்-அமைச்சர் விஜய் பாணியில் நடிகர் தனுஷ் அரசியல் பயணத்தை மேற்கொள்கிறாரா? என்ற கேள்வி எழுந்திருப்பது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சம்பத்குமார், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து, மக்களை சந்தித்து வாக்கு கேட்கலாம். அதற்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் யார் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்யப் போகிறார்கள். இன்று மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.