நவகைலாய கோவில்களுக்குகூடுதலாக பஸ்கள் இயக்கம்

நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.
நவகைலாய கோவில்களுக்குகூடுதலாக பஸ்கள் இயக்கம்
Published on

மார்கழி மாதத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ கைலாய கோவில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 18-ந்தேதி முதல் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த வாரம் முன்பதிவு மற்றும் பயணிகள் வருகை அடிப்படையில் 4 பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் கூடுதலாக பயணிகள் நவ கைலாய கோவில்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

இதையொட்டி நேற்று கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, புன்னக்காயல் ஆகிய 9 கோவில்களுக்கு பஸ்களில் பக்தர்களை அழைத்து சென்று, மீண்டும் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இரவு கொண்டுவந்துவிட்டனர். தொடர்ந்து வருகிற 1-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com