அமைச்சர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக குவிந்த மக்கள்;கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

அமைச்சர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மக்கள் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
அமைச்சர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக குவிந்த மக்கள்;கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
Published on

அமைச்சர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மக்கள் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

மக்கள் குவிந்தனர்

தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு ஈ.பி.பி.நகரில் நேற்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்தார். அப்போது நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அவர்கள் பொருட்களை வாங்குவதற்காக ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை வரிசையாக நிற்கும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் பொருட்களை வாங்கும் ஆர்வத்தில் பெண்கள் முன்னோக்கி சென்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்.

நிர்வாகிகளை கண்டித்த அமைச்சர்

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கூட்டத்தை ஒரு வழியாக போலீசார் கட்டுப்படுத்தி பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்தனர். இதையடுத்து அமைச்சர் சு.முத்துசாமி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதற்கிடையே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தி.மு.க. நிர்வாகிகளை அமைச்சர் சு.முத்துசாமி கண்டித்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், "பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேடி சென்று நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும். பொதுமக்களை ஒரே இடத்தில் வரவழைத்து கொடுப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போதே முறையாக செய்திருக்க வேண்டும்", என்று கண்டிப்புடன் தரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com