

தேனி,
ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, பணம் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை அங்கிருந்த சிலர் தடுக்க முயற்சி செய்தனர். இதனால் தற்காப்புக்காக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை எண்ணும் பணியில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அங்கு கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.