ஆகஸ்ட் மாதம்: நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு

ஆகஸ்ட் மாதம் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு தமிழக் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம்: நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை

தமிழக அரசு வெளியிட்டு உள்ள தகவலில் ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1,3,4 ஆம் தேதி வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தரவேண்டும் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவு. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட்டாது என தெரிவிக்க வேண்டும்.

நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர் சார்பாக ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும்.

நியாய விலை கடைகளுக்கு வரும் 7 ஆம் தேதி விடுமுறை அல்ல.ரேசன் கடைகளுக்கு 7ந்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தொகுப்பாக வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com