

சென்னை வண்டலூர் கவுப்பாக்கம் சோழன் நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவருடைய மகன் தீபக் (வயது 17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான்.
அலெக்ஸ் பாண்டியன் நேற்று தனது மகன் தீபக்குடன் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தார். தீபக்கின் நண்பர்களும் உடன் வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தந்தை கண் எதிரேயே ராட்சத அலையில் சிக்கி தீபக் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான். இதுபற்றி சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபக்கை தேடி வருகின்றனர்.