போடி நகரில் நாய் கடித்து மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்

போடி நகரில் நாய் கடித்து மாணவன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
போடி நகரில் நாய் கடித்து மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
Published on

போடி நகராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மேலத்தெரு பகுதியில் சுமார் 65வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று அவரை விரட்டி சென்று கடித்தது. மேலும் பள்ளி மாணவன் ஒருவனை நாய் கடித்தது. படுகாயமடைந்த 2 பேரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் நகரின் பல பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் தெருவில் தனியாக நடந்து செல்ல முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com