தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்-போக்குவரத்து துறை அமைச்சர்

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்-போக்குவரத்து துறை அமைச்சர்
Published on

சென்னை

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com