சென்னிமலையில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை

சென்னிமலையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததை பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலையில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

சென்னிமலை

சென்னிமலையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததை பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவர்

சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் தரணி (வயது 17). இவர் சென்னிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் தரணியை அவரது பெற்றோர் சென்னிமலை அருகே வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர்.

ஆனால் தரணி அந்த பள்ளிக்கூடத்திலும் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போனை பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் தரணியின் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

சாவு

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி விஷம் குடித்து வாந்தி எடுத்தபடி தரணி மயங்கி விழுந்து உள்ளார். இதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் தரணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தரணி இறந்துவிட்டார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com