சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார்; 180 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் கஞ்சா கடத்திய காரை சினிமா பாணியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கினர்.
சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார்; 180 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

பெரம்பலூர்,

சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. உடனடியாக அந்த காரை துரத்தி சென்ற போலீசார், அதை நிறுத்த டயர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் காரில் கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com