ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் -மு.க.ஸ்டாலின் கருத்து

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் -மு.க.ஸ்டாலின் கருத்து
Published on

சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் தேவையில்லை என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் மக்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும். பெரும்பாலான ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் டெல்டா பகுதியிலே அமைந்துள்ளது. மேலும் டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் பகுதி. சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி முதல்வர் நாடகம் நடத்தியுள்ளதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகம் ஆடியுள்ளார் முதல்வர். 'நீட்'டுக்கு எதிரான 2 சட்டப்பேரவைத் தீர்மானங்களையே பொருட்படுத்தாத பிரதமர், இவரது கடிதத்திற்கா செவிசாய்க்கப் போகிறார்?

இது குறித்து அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றத் தைரியம் உண்டா? என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com