

தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவதானப்பட்டி முருகமலை அடிவாரத்தில் உள்ள கடையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான அதே ஊரை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 42) என்பவரை பாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 510 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.