வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி
Published on

மானூர்:

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பெண்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் அதிசய சாமுவேல் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி தனது மனைவி ஜான்சிராணியுடன் (வயது 30) மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். ராமையன்பட்டி போலீஸ் காலனி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜான்சிராணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மீது மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு விபத்து

தெலுங்கானா மாநிலம் நாகர்கன் நூரை சேர்ந்த 13 அய்யப்ப பக்தர்கள் ஒரு வேனில் சபரிமலை சென்றுவிட்டு திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் உவரியை அடுத்த குஞ்சன்விளை அருகே சென்றபோது குட்டம் கீழத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 54) என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ, வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com