ஈரோடு மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா

கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா
Published on

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 432 பேருக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 164 ஆக உயர்ந்தது.

நேற்று 20 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 288 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 182 பேர் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 734 பேர் ஈரோடு மாவட்டத்தில் கொனேரானாவுக்கு பலியாகி உள்ளனர

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com