ஈரோடு மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா

கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
Published on

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 345 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 482 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 622 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 16 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 126 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com