ஈரோடு கே.எஸ்.நகரில்அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா தீவிர வாக்கு சேகரிப்பு

தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கே.எஸ்.நகரில்அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா தீவிர வாக்கு சேகரிப்பு
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது அமைச்சருடன், ஈரோடு மாநகராட்சி 39-வது வார்டு செயலாளர் மகேஷ்வரன், 39-வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், கருங்கல்பாளையம் மக்கள் சேவை மைய தலைவரும், தி.மு.க. பிரமுகருமான கேபிள் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com