குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 7-வது இடம் பிடித்து ஆண்டிப்பட்டி மாணவி சாதனை

குரூப்-1 தோவில் மாநில அளவில் 7-வது இடம் பிடித்து ஆண்டிப்பட்டி மாணவி சாதனை படைத்தார்
குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 7-வது இடம் பிடித்து ஆண்டிப்பட்டி மாணவி சாதனை
Published on

ஆண்டிப்பட்டி பூக்காரத் தெருவை சேர்ந்தவர் மோகன்வடிவேல். இவரது மகள் பிரியா (வயது 29). எம்.இ. பட்டதாரியான இவர், குரூப்-1 தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடந்தது. அதில் பிரியா பங்கேற்று தேர்வு எழுதினார். அதில் மாநில அளவில் 7-ம் இடம் பிடித்து, தற்போது சென்னையில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் துணை கலெக்டருக்கான ஆணையினை பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com