கூடலூரில்தேசிய நெடுஞ்சாலையில் ஆண் பிணம்

கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆண் பிணம் கிடந்தது.
கூடலூரில்தேசிய நெடுஞ்சாலையில் ஆண் பிணம்
Published on

கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூர் தேவர் சிலை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக கூடலூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் அமாவாசைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் பச்சை நிற கோடு போட்ட முழுக்கை சட்டை பச்சை நீலம் வெள்ளை கலந்த கட்டம் போட்ட வேட்டி அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com