கூடலூரில் ரூ.50 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

கூடலூரில் ரூ.50 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது
கூடலூரில் ரூ.50 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
Published on

கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு முல்லைப்பெரியாறு மூலம் 18-ம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் 406 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வரப்படுகிறது. கப்பா மடை புலம் பகுதி தோட்ட விவசாயிகளும் இந்த கரை பகுதி வழியாக விளைநிலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வந்தது. மேலும் மழைக்காலங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதனால் விவசாயிகள் மண் சாலையை, தார்சாலையாக மாற்ற வேண்டும் என நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நமக்கு நாமே திட்டம் கீழ் புதிய தார் சாலை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை இன்று நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com